பொலித்தீனுக்கு பதிலீடாக துணிப்பைகள்
ஊர்காவற்றுறை பிரதேச சபையால் கடந்த முதலாம் திகதி முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் முன்மாதிரி செயற்பாடாக மக்கள் பொலித்தீன் பைகளுக்கு மாற்றீடாக பயன்படுத்தும் வகையில் உக்கக்கூடிய துணிப் பைகள் அறிமுகம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது.
‘சூழலை நேசிப்போம் எம் சந்ததியை காப்போம்’ என்ற தொனிப்பொருளில் தைப்பொங்கல் தினத்தில் துணிப்பைகளை அறிமுகம்செய்யும் நிகழ்வு புளியங்கூடல் ரட்ணம் பவுண்டேன்சன் மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த செயற்றிட்டத்துக்கு புளியங்கூடல் ரட்ணம் பவுண்டேசன் நிறுவனம் முழுமையான அனுசரணையினை வழங்கி ஊர்காவற்றுறை பிரதேச சபையூடாக பிரதேச மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நீண்டகாலம் பயன்படுத்தக் கூடியதும் உக்கக்கூடியதுமான துணிப்பைகளை விநியோக செய்யப்பட்டுவருகின்றது.
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் இவ் முன்மாதிரியான செயற்றிடத்திற்கு சூழலியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.