;
Athirady Tamil News

ஏறிய வேகத்தில் இறங்கிய வெங்காய விலை – ஆனால் மற்ற காய்கறி ரேட் பாருங்க..!

0

வெங்காயத்தின் விலை குறைய தொடங்கியுள்ளது.

பருவமழை
கடந்த சில நாட்களாக காய்கறி வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தின் விலை திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது, தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

எனவே விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 131 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 27 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 44 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகள் விலை
பீட்ரூட் ஒரு கிலோ 28 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 34 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 34 ரூபாய்க்கும், சுரக்காய் ஒரு கிலோ 22 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

ஆனால், நேற்று விற்பனையாகி வந்த விலையை விட இன்று விலை அதிகரித்து கேரட் கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் கிலோ 21 ரூபாய்க்கும், அவரைக்காய் கிலோ 47 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் கிலோ 49 ரூபாய்க்கும், சேப்பக்கிழங்கு ஒரு கிலோ 29 ரூபாய்க்கும், மக்காச்சோளம் ஒரு கிலோ 28 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

கத்திரிக்காய் கிலோ 25 ரூபாய்க்கும், பூண்டு ஒரு கிலோ 149 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.