;
Athirady Tamil News

வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்திய நபர் மரணம்

0

துனுகெதெனிய பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பூசி செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.

53 வயதுடைய குறித்த நபரின் உடலில் கிருமி நுழைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நுண்ணுயிர் எதிர்ப்பிகளை செலுத்தியதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் இடர் மதிப்பீட்டு உபகுழு தற்காலிகமாக பாவனையிலிருந்து விலகிக்கொள்ளுமாறு கூறியிருந்த co-Amoxiclave மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பியான Flucloxacilli ஆகிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளை நோயாளிக்கு இருபது நிமிட இடைவெளிக்குள் வழங்கியதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசியால் மரணம்
இந்த நோயாளி காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்த மரணம் குறித்து பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதில் மாரடைப்பு மற்றும் கிருமி நுழைந்ததால் மரணம் நிகழ்ந்தது எனத் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே co-Amoxiclave மருந்தின் பயன்பாட்டினால் ஏற்பட்ட ஒவ்வாமை எதிர்விளைவுகளால் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.

இது நிகவெரட்டிய, ராகம, கரவனெல்ல மற்றும் வட்டுபிட்டியல வைத்தியசாலைகளில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.