;
Athirady Tamil News

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதி

0

அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி நாளை (07) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் நேதன், இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நாட்டிற்கு வருகிறார்.

முதலீடுகள்
அத்தோடு, ஸ்காட் நேதன் இரண்டு நாட்கள் தங்கியிருந்து முக்கிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் அமெரிக்க நிறுவனம் முதலீடு செய்யும் பல திட்டங்களில் கையெழுத்திட உள்ளதாகவும் நம்பப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.