;
Athirady Tamil News

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு TIN தொடர்பில் வெளியான அறிவிப்பு!

0

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘TIN’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே. சமன் சாந்த தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் உள்ள ஒருவர் இலங்கையில் இருந்து வருடத்திற்கு 12 இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினால் கண்டிப்பாக TIN எண்ணை பெற வேண்டும் என்றார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே. சமன் சாந்த இதனைத் தெரிவித்தார்.

TIN இலக்கத்தைப் பெறுவதற்கு மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும், வாகனப் பதிவு தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மோட்டார் வாகனத் திணைக்களத்துடன் கணினிகளை இணையப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இலங்கை சுங்கத்துடன் கணனி வலையமைப்பில் செயற்படுவதால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான அனைத்து தகவல்களையும் திணைக்களம் பெற்றுக் கொள்கிறது எனவும் பிரதி ஆணையாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அனைத்து நிறுவனங்களுடனும் வலையமைப்பதன் மூலம் தலைமறைவாக இருக்கும் வரி ஏய்ப்பு செய்பவர்களை அடையாளம் காண முடியும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.