;
Athirady Tamil News

ஆபிரிக்காவில் நிலத்திற்கு அடியில் வீடு கட்டி வாழும் மக்கள் : காரணம் இதுதானாம்!

0

வடக்கு ஆபிரிக்க நாடான துனிசியாவில் அரபு மொழி பேசும் பெர்பர் இன மக்கள் வாழும் மட்மதா (matmata) என்ற சிறிய நகரம் ஒன்று உள்ளது.

தெற்கு துனிசியாவின் டிஜெபல் தஹார் பிராந்தியத்தின் வறண்ட பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள நிலப்பரப்பிலேயே இந்த நகரம் அமைந்துள்ளது.

பதுங்கு குழிகள், இரகசிய அறைகள், சுரங்கப் பாதைகள், நிலத்தடி அறைகள் எல்லாம் வரலாற்று புத்தகங்களிலும் செய்திகளிலும் கேட்டிருப்போம்.

மட்மதா நகரம்
போர் அல்லது ஆபத்து வரும்போது அரசர்கள் முதல் சாதாரண மக்கள் வரை நிலத்தடி பாதைகளிலோ அல்லது அறைகளிலோ தங்குவார்கள். ஆனால் ஒரு தென்னாபிரிக்க நகரமே நிலத்திற்குள் தான் இருக்கிறது.

ஒவ்வொரு ஸ்டார் வோர்ஸ் (star wars) ரசிகருக்கும் லூக் ஸ்கைவால்கரின் (Luke Skywalker) வீட்டின் இருப்பிடம் பற்றி கொஞ்சம் தெரியும். அந்த இருப்பிடங்கள் எல்லாம் இந்த துனிசியாவின் மட்மதா நகரத்தில் தான் படப்பிடிப்பு செய்யப்பட்டது.

ஆனால் இப்போது இந்த பாரம்பரிய கட்டமைப்புகள் கொண்ட நகரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேறுவதால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

வெப்பத்தில் வாழ முடியாத காரணத்தால்
பெர்பர் இன மக்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். அவர்கள் அரேபியாவில் இருந்து துனிசியா நாட்டிற்கு குடிபெயர்ந்த போது மட்மதாவில் உள்ள வறண்ட நிலத்தில் வெப்பத்தில் வாழ முடியாத காரணத்தால் இங்குள்ள நிலத்தின் அடியில் மண்ணை தோண்டி மக்கள் வாழத் தொடங்கினர்.

எளிய கைக்கருவிகளுடன் தோண்டக்கூடிய அளவுக்கு மென்மையாக இருக்கும் மணற்கல்லில் முதலில் ஆழமான வட்டக் குழியைத் தோண்டி வீடுகள் கட்டுகின்றனர். குகையின் விளிம்புகளைச் சுற்றி தோண்டப்பட்டு, நிலத்தடி அறைகளை உருவாக்கி வீட்டின் அமைப்பை கொண்டு வருகின்றனர்.

இந்த தனித்துவமான ட்ரோக்ளோடைட்(troglodyte) கட்டுமானமானது பகலில் வெப்பத்திலிருந்து தப்பிக்க உதவியுள்ளது . ஆனால் 1960களில் பெய்த கனமழை, வெள்ளத்தில் நிலத்தடி குடியிருப்புகள் சிறிதளவு சேதமடைந்துள்ளன.

நவீன வசதிகளுடன் மாற்றம்
இருப்பினும் இன்றைய சூழலில் இந்த வீடுகள் அனைத்து நவீன வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வீட்டில் ஒவ்வொரு கொல்லைப்புறமும் ஒரு முற்றத்துடன் இணைகிறது. நிலத்தடி வீட்டிற்கு இந்த முற்றம் மிக முக்கியமானது. ஏனெனில் அது தான் இந்த வீட்டிற்கு வெளியில் இருந்து காற்றைக் கொண்டுவருகிறது.

குடும்ப உறுப்பினர்கள் வேலைகளைச் செய்வதற்கும் சமூக ரீதியாக இணைவதற்கும் இது ஒரு மைய இடமாக விளங்குகின்றது. மட்மதா சுரங்க வீடுகளில் இருந்து சுவரில் பதிக்கப்பட்ட கால் வைக்கும் படி போன்ற அமைப்பைக் கொண்டு தாவி நிலப்பரப்பை அடைகின்றனர்.

துனிசியா அதிபர் ஹபீப் போர்குய்பா நாட்டை நவீனமயமாக்க முயன்ற போது இந்த நகரமும் அங்குள்ள பெர்பர் மக்களும் பல புதிய வசதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.