பதுளை மாவட்டத்தில் 68% நிலப்பகுதி மண்சரிவு ஏற்படும் அபாயத்தில்
பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68% பகுதி ஏதோ ஒரு வகையான மண்சரிவு அபாயத்தைக் கொண்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை நிலவிய காலப்பகுதியில், பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 368 பிரதான மண்சரிவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனத்தின் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த மண்சரிவு அபாயம் காரணமாக, இதுவரை சுமார் 650 வீடுகள் அதி உயர் அபாய நிலைக்குள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.