;
Athirady Tamil News

யாழில் ஈரநிலத்திற்கான இயற்கை நடைபயணம்

0

சர்வதேச ஈரநில தினம் எதிர்வரும் 02ஆம் திகதி கொண்டாப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு எதிர் காலத்திற்கான சுற்றுச்சூழல் கழகமும், சிறகுகள் அமையமும் இணைந்து பாடசாலை மாணவருக்கான களப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர் ம.சசிகரனின் தலைமையில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற கள பயணத்தின் போது, செம்மணி பிரதேசத்தில் அமைந்துள்ள ஈரநிலப் பிரதேசத்தினுள் மாணவர் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்கள் ஈரநிலத்தில் வாழும் சிற்றுயிர்கள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என்பவற்றை அவதானிக்க புலமை மிக்க வளவாளர்களால் வழிகாட்டல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இங்கு மாணவருக்கு ஈரநிலங்களின் முக்கியத்துவம், ஈரநிலங்கள் பாதுகாக்ப்படலில் ஒவ்வொரு தனி மனிதனதும் பங்களிப்பு என்பனவும் எடுத்துக் கூறப்பட்டது.

இவ் ஈரநிலத்திற்கான இயற்கை நடைபயணத்தில் மாணவர்கள் மட்டுமன்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வயது வேறுபாடின்றி மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றியதையும் அவதானிக்க முடிந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.