;
Athirady Tamil News

ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் UPI பணம் செலுத்தும் முறை…. பிரதமர் மோடி அறிவிப்பு

0

ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் யுபிஐ முறையில் பணம் செலுத்தும் முறை தொடங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அந்நாட்டில் தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்று பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். அவரை அந்நாட்டின் அதிபர் ஷேக் முகம்மது பின் சயீத் வரவேற்றார். இதன்பின்னர் பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதர் மோடி பேசியதாவது-

இன்று அபுதாபியில், நீங்கள் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளீர்கள். நீங்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இங்கு வந்துள்ளீர்கள். உங்ள் அனைவரின் இதயமும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று மைதானத்தில் , ஒவ்வொரு இதயத்துடிப்பும், ஒவ்வொரு மூச்சும், ஒவ்வொரு குரலும் வாழ்க இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நட்பு என்று சொல்கிறது.

இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையேயான உறவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை எட்டியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் பள்ளிகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்… கடந்த மாதம் ஐஐடி டெல்லி வளாகத்தில் முதுகலை படிப்பு தொடங்கப்பட்டது, மேலும் துபாயில் புதிய சிபிஎஸ்இ அலுவலகம் விரைவில் திறக்கப்படும். இந்த நிறுவனங்கள் சிறந்த கல்வியை வழங்க உதவியாக இருக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் UPI கட்டணம் விரைவில் தொடங்கப்படும்

இது இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக வங்கி கணக்குகளுக்கு இடையில் தடையற்ற வழியில் பணம் செலுத்துவதை சாத்தியமாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.