;
Athirady Tamil News

இன்றைய சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் தேவை இல்லாமல் *அதிரடி இணையத்தை வம்புக்கு இழுத்த* டிராம் பாலா என்பவர்.. (நடந்தது என்ன?)

0

இன்றைய சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் தேவை இல்லாமல் *அதிரடி இணையத்தை வம்புக்கு இழுத்த* டிராம் பாலா என்பவர்.. (நடந்தது என்ன?)

மூன்று தினங்களுக்கு முன்னர் இன்றைய சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் நடைபெறவுள்ள பொதுச்சபைக் கூட்டம், அங்குள்ள நிர்வாக சீர்கேடுகள் குறித்து சுமார் பதினைந்துஇருபது பேர்ண் முருகன் ஆலய அடியார்கள் *அதிரடி* இணையத்துக்கு வழங்கிய தகவலை வைத்து பிரசுரித்து இருந்தோம்.

இதனையடுத்து மறுநாள் அதிரடி இணையத்தின் ஆரம்பகர்த்தா ஒருவருடன், தொடர்பு கொண்ட *டிராம் பாலா* எனும் திரு.பாலமுருகன், இதில் குறிப்பிட்டு உள்ள பரமு என்பவர் குறித்து எழுதியுள்ளவை பிழை, அவரைப் பற்றி முழுமையாகத் தெரியுமா? இந்தத் தகவலைத் தந்தது யார்? எனப் பல கேள்விகள் அவரிடம் கேட்டு இருந்தார்.

அதுக்குப் பதிலளித்த அவரோ, எமது நிருபர்களுடன் தொடர்பு கொண்ட சுமார் பத்துப்பதினைந்து பேர் இத்தகவல்களை வழங்கி உள்ளனர், அவர்கள் யாரெனும் கேள்வி உங்களுக்கு வேண்டாம், தகவல் தருபவர்களைக் காட்டிக் கொடுப்பது ஊடக தர்மம் இல்லை, இத்தகவல்கள் பிழையென்றால் நீங்களோ மறுதரப்பினரோ எழுத்து மூலம் அதிரடிக்கு அறிக்கை அனுப்புங்கள், அதிரடி அதனையையும் பிரசுரிக்கும்* எனத் தெரிவித்து உள்ளார்.

அவரும் மீண்டும் தொடர்பு கொண்டு கோயில் நிர்வாகம் எழுத்து மூலம் தரவில்லையாம் எனத் தெரிவித்தார்.

ஆயினும் இன்றைய சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில், *அதிரடி இணையத்துக்கு இத்தகவலை வழங்கியது பரமு எனும் ஆறுமுகம் பரமேஸ்வரன் என உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கிக் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார் *டிராம் பாலா* எனும் திரு.பாலமுருகன் என்பவர்.

தன்னைத் தானே *தீவான்* எனக் கூறிக் கொண்டு வாழும் டிராம் பாலா எனும் திரு.பாலமுருகன் என்பவர் தீவுக்கே உரிய நேர்மையை மறந்து, உண்மைக்குப் புறம்பாக இதுபோன்ற பொய்யான தகவல்களை அங்கு தெரிவித்தமையை அதிரடி இணையம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இன்றைய பொதுச்சபைக் கூட்டத்தில் நடந்தது என்ன?அங்கு திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஒருதலைப்படசமான நடவடிக்கைகள் என்ன? அங்கு ஒரே ஊரை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக தெரிவு செய்யப்பட்டதன் காரணம் என்ன? போன்ற விடயங்களை தேவையெனில் அதிரடி இணையம் வெளிக்கொணரும். நன்றி

/அதிரடி இணையத்துக்காக உண்மை விளம்பி/

சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் மீண்டும் குளறுபடி.. நடந்தது என்ன? நடப்பது என்ன?? (விபரமான தகவல் படங்களுடன்..)

You might also like

Leave A Reply

Your email address will not be published.