;
Athirady Tamil News

என் மகன் திரும்பிவந்தால் நன்றாக இருக்கும்: பிரித்தானிய மன்னர் சார்லஸ் விருப்பம்

0

மன்னர் சார்லசுக்கும், எலிசபெத் மகாராணியாருக்கும், இளவரசர் ஹரி மீது அதிக பாசம் என கூறப்படுவதுண்டு. அதை நிரூபிப்பதுபோல, ராஜ குடும்பத்துக்கும் பெரும் தலைக்குனிவைக் கொண்டுவந்த நிலையிலும், தன் மகன் ஹரி திரும்பிவந்தால் நன்றாக இருக்கும் என சார்லஸ் கூறியதாக ஒரு செய்தி மீண்டும் உலாவருகிறது.

ஹரியை திரும்ப அழைப்பீர்களா என மன்னரிடம் கேள்வி
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மன்னர் சார்லசிடம், உங்கள் இளைய மகனை திரும்ப அழைப்பீர்களா என மன்னரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மன்னர், இளவரசர் ஹரி திரும்ப வந்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.

இதே செய்தியை வேறு மாதிரி எழுதிய பிரித்தானிய ஊடகங்கள்
விடயம் என்னவென்றால், இந்த சம்பவம், கடந்த ஆண்டு மன்னர் சார்லஸ், மாணவர்கள் சிலரை சந்தித்தபோது நடந்ததாகும். அப்போது இதே செய்தியை பிரித்தானிய ஊடகங்கள் வேறு மாதிரியாக திரித்து எழுதியிருந்தன.

அதாவது, மன்னர் கிழக்கு லண்டனிலுள்ள Stratford பல்கலையில் மாணவர்களை சந்தித்துக்கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்த ஒருவர், , உங்கள் இளைய மகன் ஹரியை திரும்ப அழைப்பீர்களா (Bring back Harry please, can you please bring him back please, Sir?)என மன்னரிடம் கேட்க, அவர் பேசியது மன்னர் காதில் சரியாக விழாததால், யாரை? என்று கேட்டுள்ளார் மன்னர்.

உடனே அந்த நபர், உங்கள் மகன் ஹரியை, மன்னர் அவர்களே, என்று கூற, உடனே சார்லஸ், இளவரசர் ஹரி திரும்ப வந்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.

அந்த நேரத்தில், மன்னர் சார்லஸ், ஹரியா, யார் அது? என்று கேட்டுவிட்டார் என்ற விதத்தில் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.