;
Athirady Tamil News

8000 கி.மீ பறந்து சென்று நெகிழ்ச்சியான செயலை செய்யும் பிரித்தானிய மருத்துவர்கள்!

0

பிரித்தானியாவில் “பிராட்ஃபோர்டு ராயல் இன்ஃபர்மரி” வைத்தியசாலையை சேர்ந்த “ஈஎன்டி” எனப்படும் காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணர்களும், மலாவி நாட்டிற்கு சென்று செவித்திறன் குறைபாடு உடைய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை அளித்து வருகின்றனர்.

பிரித்தானியாவில் இருந்து சுமார் 8,000 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு தான் மலாவி.

இந்த சேவையில், பேராசிரியர். கிரிஸ் ரெயின் (Prof. Chris Raine) தலைமையிலான பிராட்ஃபோர்டு மருத்துவர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றன.

இது தொடர்பில் பேராசிரியர்.டாக்டர் ரெயின் கூறியதாவது,

செவித்திறன் குறைபாடு கண்ணுக்கு புலப்படாத நோய். இது குழந்தைகளுக்கு கல்வி கற்பதில் சிரமத்தை உண்டாக்கி, ஈடுபாட்டை குறைக்க கூடிய குறைபாடு. பிறருடன் பழகுவதையும், வேலை வாய்ப்புகளையும் இந்த குறைபாடு தடை செய்து விடலாம்.

பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள பல நாடுகளில் செவித்திறன் குறைபாடு உடைய குழந்தைகள் அதிகம் உள்ளனர்.

ஆனால், பெரும்பாலான நோயாளிகளுக்கு இது குணப்படுத்தக் கூடியதுதான் என அவர் தெரிவித்தார்.

மேலும், செவித்திறன் குறைபாட்டை சரி செய்வதில் முக்கிய சிகிச்சை முறையான “காக்லியர் இம்ப்லேன்ட்” (cochlear implant) எனும் சிகிச்சைக்கு தேவைப்படும் கருவிகளை “மெட்எல்” (MedEl) எனும் நிறுவனம் இவர்களுக்கு இலவசமாக தருவது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பிராட்ஃபோர்டு மருத்துவர்கள், மலாவியில் 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கு செவித்திறன் குறைபாட்டை நீக்கியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.