;
Athirady Tamil News

புலோப்பளை அறத்திநகர் கடல்றொழிலாளர்கள் கோரிக்கை – இறங்குதுறை மற்றும் வீதியை அமைக்கும் வகையில் திட்டம் தயாரிக்குமாறு துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

0

புலோப்பளை, அறத்திநகர் கடல்றொழிலாளர் சங்கத்தினரின் தொழில் நடவடிக்கைகளுக்காக இறங்குதுறை மற்றும் அதனோடு குறித்த இடத்திற்கு சொல்லும் வீதியையும் அமைக்கும் வகையிலான திட்டம் ஒன்றினை தயாரிக்குமாறு துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை வழங்கியுள்ளார்.

முன்பதாக முறையான இறங்குதுறை இல்லாமையால் நாளாந்தம் பல நெருக்கடிகளை எதிர்கொள்ளும் புலோப்பளை, அறத்திநகர் கடல்றொழிலாளர் சங்கத்தினரால் தமக்கான ஓர் இறங்குதுறையை அமைத்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த கோரிக்கையின் பிரகாரம் அப்பகுதிக்கு நேரடி விஜயம் செய்த கடல்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடல்றொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

இந்நிலையில் அவர்களது வாழ்வாதார தேவையாக குறித்த கவனம் செலுத்திய அமைச்சர் இறங்குதுறை மற்றும் அதனோடு குறித்த இடத்திற்கு சொல்லும் வீதியையும் கட்டம் கட்டமாக அமைக்கக்கூடிய வகையில் திட்டம் ஒன்றினை துரிதமாக தயாரிக்குமாறு துறைசார் தரப்பினருக்கு பணிப்புரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி தீர்வு காணும் நோக்கிலான மக்கள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற கண்ணகைபுரம் கிராமத்தின் அடிப்படை மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதியின் நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக நாடு தளுவிய ரீதியில் விவசாயத்தை நவீனமயப்படுத்தி விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு மாவட்ட ரீதியில் ஒர் முன்மாதிரி கிராமத்தை தெரிவுசெய்யும் திட்டத்தில் ஊடக கிளிநொச்சியில் கண்ணகைபுரம் கிராமம் தெரிவாகி அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட விவசாய மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சந்தித்து அவர்களது எதி்ர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியின் பயனாகவே ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட காணிகளில் அப்பகுதியை சேர்த 146 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு காணிகள் பகிரந்தளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விவசாய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இன் நிலையில் மேலும் 26 பயனாளிகள் தெரிவாகியுள்ளதோடு அவர்களுக்கும் விரைவில் காணிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.