;
Athirady Tamil News

பிரான்சில் நாயுடன் வாக்கிங் சென்ற நபருக்கு கிடைத்த அரிய பொருள்

0

பிரான்சில் தன் நாயுடன் வாக்கிங் சென்றுகொண்டிருந்த ஒருவருக்கு, டைனோசார் ஒன்றின் புதைபடிவம் ஒன்று கிடைத்துள்ளது.

பிரான்சில் நாயுடன் வாக்கிங் சென்ற நபருக்கு கிடைத்த அரிய பொருள்
பிரான்சில் வாழும் டேமியன் (Damien Boschetto) தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட ஒருவர் ஆவார். Montouliers என்னுமிடத்தில் தன் நாயான Muffinஉடன் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது, மண் அரிப்பினால் தரைக்கு வெளியே ஏதோ எலும்புகள் நீட்டிக்கொண்டிருப்பதைக் கவனித்துள்ளார்.

ஏற்கனவே தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டவர் என்பதால், டேமியனுக்கு அந்த எலும்புகள் என்ன எலும்புகள் என்பது புரிந்துள்ளது.

டேமியன், Association of Culture, Archeology and Paleontology (ACAP) என்னும் அமைப்பில் தன்னார்வலாக உள்ளார். ஆகவே, அவரும் அவரது சக தன்னார்வலர்களும் ஆராய்ச்சியாளர்களுமாக தொடர்ந்து அந்த இடத்தில் இரண்டு ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார்கள்.

அரிய கண்டுபிடிப்பு
விடயம் என்னவென்றால், Montouliersக்கு அருகிலுள்ள Cruzy என்னும் கிராமத்தில் கடந்த 28 ஆண்டுகளாக இதுபோல் அவ்வப்போது டைனோசார்களின் புதைபடிவங்கள் கிடைத்துவருவதுண்டாம். ஆனால், தங்கள் பகுதியான Montouliersஇல் இப்படி ஒரு விடயம் கிடைத்திருப்பதால் டேமியனுக்கும் அவரது நண்பர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி.

அதுமட்டுமில்லை, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புகள், 10 மீற்றர் அல்லது 33 அடி நீளம் கொண்ட titanosaurus என்னும் வகை டைனோசாரின் எலும்புகள் ஆகும். இவ்வகை டைனோசார்கள் ஐரோப்பாவில் அதிகம் காணப்பட்டதாக கருதப்படுபவைதான் என்றாலும், இந்த முறை கிடைத்துள்ள எலும்புகள், கிட்டத்தட்ட ஒரு முழு டைனோசாரின் எலும்புகள் ஆகும். இப்படி ஒரு கண்டுபிடிப்பு சமீப காலத்தில் நடக்கவில்லை என்பதால், இது ஒரு அரிய கண்டுபிடிப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.