;
Athirady Tamil News

கனடாவில் சிறுவர்களின் உயிர் காக்கும் புதிய மருத்துவ உபகரணம் கண்டுபிடிப்பு

0

கனடாவின் மொன்றியால் மருத்துவர்கள் சிறுவர்களின் உயிர்களை காக்கும் வகையிலான மெய்நிகர் அவசர சிகிச்சைப் பிரிவு தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆண்டு தோறும் விபத்துக்கள் மூலமாக சுமார் ஒரு மில்லியன் சிறுவர்கள் உலகம் முழுவதிலும் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் விபத்துக்களினால் ஏற்படக்கூடிய மரணங்களை வரையறுக்கும் நோக்கில் கனேடிய மருத்துவர்கள் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.

மருத்துவர்களின் அறிவுறுத்தல்கள்
குறித்த தெரழில்நுட்பத்தை மருத்துவர்களுக்கு பயிற்றுவிப்பதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான உயிர்களை காக்க முடியும் என மருத்துவா ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

PeTIT VR என்ற இந்த மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக தொலை தூரத்தில் இருந்துகொண்டு விபத்துக்களினால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருத்துவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மருத்துவ உதவியாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய தொழில்நுட்பம் தற்பொழுது பரீட்சார்த்த மட்டத்தில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.