;
Athirady Tamil News

அமெரிக்காவில் கொல்லப்பட்ட மற்றுமொரு இந்திய மாணவன்!

0

அமெரிக்காவில் இநதிய மாணவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வரும் பின்னணியில், தற்போது ஆந்திரவை சேர்ந்த மற்றுமொரு மாணவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் பதிவான 9 ஆவது மரணமாக குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சக மாணவர்கள் ஒன்று சேர்ந்து தாக்குதலை மேற்கொண்டமை குறித்த மாணவனின் மரணத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாணவர்களுக்கிடையிலான தகராறு
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய பருச்சுரி அபிஜித் எனும் மாணவன் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார்.

இந்த நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் சக மாணவர்களுடன் பருச்சுரி அபிஜித்துக்கு தகராறு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது, அபிஜித்திடம் இருந்த பணம் மற்றும் மடிக்கணினியை பறித்துக் கொண்ட சக மாணவர்கள், அவரை அடித்துக் கொன்றுள்ளனர்.

கொலை விசாரணை
பின்னர். மகிழுந்தில் அவரது உடலை எடுத்து போட்டுக் கொண்டு குறித்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதையடுத்து, ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் அபிஜித்தின் உடலை வீசிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

தகவலறிந்த காவல்துறையினர், அபிஜித்தின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனைகள் முடிந்த நிலையில், தற்போது குண்டூர் மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்திற்கு அபிஜித்தின் உடல் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.