;
Athirady Tamil News

மாணவிக்கு எதிராக வழக்குத் தொடர முடிவு செய்துள்ள பிரான்ஸ் அரசு: பின்னணி

0

பள்ளி மாணவி ஒருவருக்கெதிராக வழக்குத் தொடர, பிரான்ஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

காரணம் என்ன?
பிரான்சில், பள்ளிகளில் மத சம்பந்தமான அடையாளங்களை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிப்ரவரி மாதம், 28ஆம் திகதி, தலையில் ஸ்கார்ஃப் அணிந்து பள்ளிக்கு வந்த இஸ்லாமிய மாணவிகள் மூன்று பேரிடம், சட்டப்படி பள்ளிகளில் ஸ்கார்ஃப் அணியக்கூடாது என்று கூறி, அவற்றை அகற்றுமாறு கூறியுள்ளார் தலைமையாசிரியர் ஒருவர்.

அவர்களில் இரண்டு மாணவிகள் ஸ்கார்ஃபை அகற்ற, ஒரு மாணவி ஸ்கார்ஃபை அகற்ற மறுத்துள்ளார். அதனால் இருவருக்கும் வாக்குவாதம் உருவாகியுள்ளது.

அந்தப் பெண்ணை தலைமையாசிரியர் அடித்ததாக செய்தி பரவ, ஒன்லைனில் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து அந்த தலைமையாசிரியர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

வழக்குத் தொடர முடிவு செய்துள்ள பிரான்ஸ் அரசு
இந்நிலையில், அந்த தலைமையாசிரியருக்கு, பிரான்ஸ் பிரதமர், கல்வி அமைச்சர் ஆகியோர் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன், அந்தப் பெண்ணுக்கு எதிராக அரசு வழக்குத் தொடர இருப்பதாகவும் பிரான்ஸ் பிரதமரான கேப்ரியல் அட்டால் தெரிவித்துள்ளார்.

பாரீஸில் 2020ஆம் ஆண்டு Samuel Paty என்னும் ஆசிரியர் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டதும், ஐந்து மாதங்களுக்கு முன் Dominique Bernard எனும் ஆசிரியர் தனது பள்ளியில் வைத்தே கொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.