வளமான தேசத்திற்கு உற்பத்தித்திறன் மிக்க கிராமம் சாய்ந்தமருது பகுதியில் அங்குரார்ப்பணம்
“கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவின் சாய்ந்தமருது – 08 கிராம உத்தியோகத்தர் பிரிவில்
கிராமத்தை சமூக உற்பத்தித்திறன் கிராமமாக அபிவிருத்தி செய்யும் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம்(16) நடைபெற்றது.
உற்பத்தித்திறன் ஊடாக எமது நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் இந்த பாரிய வேலைத்திட்டத்தின் சுருக்கத்தை தேசிய வேலைத்திட்ட காணொளியின் ஊடாக
சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம வேலைத்திட்டம் தொனிப்பொருளில் அவையோருக்கு காண்பிக்கப்பட்டது.
அத்துடன் சமூக உற்பத்தித் திறன் தொடர்பாக தலைமையுரையினை பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் மேற்கொண்டார்.
இது தவிர உற்பத்தி திறன் காணொளி அவையோருக்கு காண்பிக்கப்பட்டது.நிகழ்வின் அடுத்ததாக கலாச்சார நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை அரசியல் பேரவை உறுப்பினரும், கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்தி குழுவின் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.இம்தியாஸ் உட்பட clean srilanka திட்ட பிரதேச செயலக ஒருங்கிணைப்பாளர் , உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சாய்ந்தமருது – 08 கிராமத்தில் அடையாளம் காணப்பட்டவை மற்றும் எதிர்கால சமூக உற்பத்தி திறன் அபிவிருத்தி திட்டத்தின் அறிக்கையை அதிதிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன் திட்ட நிகழ்வின் மாதிரி பெயர் பலகையும் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
