;
Athirady Tamil News

நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள 10 முக்கிய வைத்தியசாலைகள்!

0

இலங்கையில் உள்ள 10 வைத்தியசாலைகளில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த போராட்டம் இன்றைய தினம் (02-04-2024) முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை அடையாள வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படும் வைத்தியசாலைகள் கீழே,

1. இலங்கை தேசிய வைத்தியசாலை 2. கராபிட்டிய போதனா வைத்தியசாலை, 3. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, 4. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, 5. பேராதனை போதனா வைத்தியசாலை, 6. திருகோணமலை போதனா வைத்தியசாலை, 7. கேகாலை பொது வைத்தியசாலை, 8. பொலன்னறுவை பொது வைத்தியசாலை, 9. மன்னார் ஆதார வைத்தியசாலை, 10.கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.