தமிழ் பகுதியில் மகனின் இறுதிக்கிரியை வீட்டில் செய்ய முடியாமல் தவிக்கும் தாய்!
முல்லைத்தீவு பகுதியில் உயிரிழந்த தனது மகனின் மரணச்சடங்கை வீட்டில் செய்ய முடியாத நிலையில் தாயொருவர் தவிக்கும் நிலை உருவாகியுள்ளதோடு தேராவில் குளத்தின் மேலதிக நீரை 5 மாதமாக வெளியேற்ற முடியாத அரச நிர்வாகமா குறித்த மாவட்டத்தில் உள்ளது என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் வழமைக்கு மாறக கிடைக்கப்பெற்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேராவில் குளம் நிரம்பி காணப்படுவதோடு மேலதிக நீர் வெளியேற முடியாத நிலை காணப்படுகின்றது.
குளத்தினை அண்மித்த பகுதியில் உள்ள மக்களின் வீடுகள் கடந்த டிசம்பர் மாதம் 18 ம் திகதி முதல் சுமார் 4 மாதங்களுக்கு மேலாக குளத்து நீரில் நிரம்பி காணப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த பகுதியில் வசித்த குடும்பங்கள் மூங்கிலாறு பொதுநோக்கு மண்டபத்தில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையில் இந்த நீரினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் மாவட்ட அரசாங்க அதிபர், முன்னெடுத்திருந்தார்.
இந்த நிலையில் 17.02.2024 அன்று குறித்த நீரை வெளியேற்றும் நடவடிக்கைக்காக ஞானம் பவுண்டேசன் நிறுவனம் முன் வந்திருந்தது இருந்தும் குறித்த நிதியை கொண்டு வேலையை நிறைவு செய்ய வனவள திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களத்தின் தடை காராணமாகவும் அந்த தடைகள் நீக்கப்படாமை காரணமாகவும் இதுவரை குறித்த வேலைத்திட்டம் பூர்த்தியாக்கப்படவில்லை.
குறித்த பகுதியில் இருந்த வீட்டின் உரிமையாளரது மகன் உயிரிழந்த நிலையில் அவரது இறுதிக்கிரியைகளை செய்வதற்கு கூட அவருடைய வீட்டில் முடியாத நிலையில் குறித்த தாய் இருப்பதோடு இவ்வாறான அதிகாரிகளின் அசம்ந்த போக்கு தொடர்பில் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.