;
Athirady Tamil News

இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்

0

இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று (17) அவுஸ்திரேலியாவில் காலமானார்.

அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என பல அடையாளங்களை கொண்ட இவர், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையின் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ், சிங்கள மாணவர்களுக்கு தென்னிந்திய இசை, கர்நாடக சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளை கற்பித்து, ஆற்றல் மிகுந்த விரிவுரையாளராக வலம் வந்தவர்.

இவரது பெயரிலேயே பல்கலைக்கழகத்தின் கட்புல, கலை, நாட்டிய, சங்கீத பீடத்துக்கான கட்டடமொன்று இயங்கி வருகின்றது.

இந்நிலையில் அவரது மறைவுக்கு , பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.