;
Athirady Tamil News

வெளிநாட்டில் உள்ளவரின் நிலையான வைப்பில் மோசடி – யாழ். வங்கி முகாமையாளர் விளக்கமறியலில்

0

வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கி முகாமையாளர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஒருவர் நீண்ட காலத்திற்கு நிலையான வைப்பில் பெருந்தொகை பணத்தினை வைப்பிலிட்ட பின்னர் வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அவர் திடீரென நாடு திரும்பி தனது நிலையான வைப்பில் உள்ள பணத்தினை மீள பெற வங்கிக்கு சென்ற போதே தனது பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதை அறிந்து , கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வங்கியின் முகாமையாளரை கைது செய்து விசாரணைகளின் பின்னர் யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.