;
Athirady Tamil News

கலோரி எண்ணிக்கையுடன் வழங்கப்பட்ட திருமண மெனு!

0

பலரும் தங்களது திருமணங்களை தனித்துவமான முறைகளில் செய்து கொள்ள விரும்புகின்றனர். பந்தல் ஏற்பாடு முதல் அவர்களின் ஆடைகள், உணவு என அனைத்திலும் தனித்துவத்தை விரும்புகின்றனர்.

ஒரு திருமணத்திற்கு செல்கிறோம் என்றால் திருமணத்திற்கு அடுத்தபடியாக உணவுகளை ருசிக்க விரும்புவோம். அந்த திருமணத்தில் சைவ உணவு அல்லது அசைவ உணவு பரிமாறுகிறார்களா என்று பார்ப்போம்.

உணவில் இருக்கும் கலோரிகள் குறித்து யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். ஆனால் இங்கு ஒரு திருமணம் மெனுவில் கலோரி குறித்த விவரங்களை விருந்தாளிகளுக்கு அளித்து பலரையும் ஆச்சர்யமடைய வைத்துள்ளனர். திருமணத்தில் வைக்கப்பட்ட உணவு மெனு குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற திருமணத்தில் தான் இந்த மெனு கொடுக்கப்பட்டுள்ளது. விருந்தினர்களுக்காக ஒரு சிறு செய்திகளுடன் மெனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ”உங்களை சௌகரியமாக வைத்துக் கொள்ளுங்கள், உணவே வீணாக்காமல் அனுபவியுங்கள்” என்று குறிப்பு எழுதிவிட்டு அதற்கு கீழே பரிமாறப்படும் என்னென்ன உணவுக்கு என்னென்ன கலோரிகள் உள்ளன என்பதை அதில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒவ்வொரு உணவிலும் அதன் கலோரி எண்ணிக்கை அருகில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது விருந்தினர்கள் எவ்வளவு கலோரி உட்கொள்கிறார்கள் என்பதை அறிய முடியும்.

பட்டியலிடப்பட்ட அனைத்து உணவுகளும் சேர்த்து 1200 கிலோ கலோரிகள் இருந்தன. விருந்தினர்கள் தங்களது பிடித்த உணவை சுவைத்த பிறகு எவ்வளவு நடனம் ஆட வேண்டும் என்பதை கலோரி பட்டியல் பயன்படுத்தி தீர்மானிக்கலாம் என்ற வேடிக்கையான குறிப்பும் அதில் இருந்தது. இந்த புகைப்படம் தான் இணையத்தில் கவனம் பெற்று வைரலானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.