இன்று இடம்பெற்ற கோரவிபத்து; 10 பேர் காயம்

அநுராதபரம் -திறப்பனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (19) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியுடன் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெக்கிராவையிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த வேனொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது வேனில் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் திறப்பனை போக்குவரத்து பொலிஸ் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.