நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தத் திருவிழா ; பக்தியுடன் கலந்துகொண்ட அடியவர்கள்
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா இன்று (22) காலை நடைபெற்றது.
காலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் ஆலய தீர்த்தக்கேணிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து, இன்றைய தினம் மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறவுள்ளது. அடுத்து, நாளை மாலை முருகப் பெருமானின் திருக்கல்யாணம் இடம்பெறவுள்ளது.
நல்லூர் கந்த ஆலய பெரும் திருவிழாவை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.