யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
இன்று காலை யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றது.
கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், மயிலிட்டி மீள்குடியேற்ற சங்கத்தினர் மற்றும், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

