;
Athirady Tamil News

விடுதி அறையில் பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு

0

கம்பஹாவில் மீகஹவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்கொட பிரதேசத்தில் விடுதி ஒன்றின் அறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீகஹவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதியின் உரிமையாளர், உயிரிழந்த பெண் தங்கியிருந்த விடுதி அறையிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் அறையை திறந்து சோதனை செய்து பார்த்த போது பெண்ணின் சடலத்தை கண்டுள்ள நிலையில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்த பெண் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகஹவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.