;
Athirady Tamil News

ஆற்றில் மூழ்கிய சிறுமி குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்: காத்திருந்த அதிர்ச்சி

0

பிரேசில் நாட்டில் ஆற்றில் மூகிய சிறுமி ஒருத்தியைக் குறித்து செய்தி சேகரிக்க அந்த ஆற்றுக்கே சென்றிருந்தார் ஊடகவியலாளர் ஒருவர்.

ஆனால், அவர் எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று அவருக்காக காத்திருந்தது!

ஆற்றில் மூழ்கிய சிறுமி
சென்ற மாதம் பிரேசில் நாட்டிலுள்ள Mearim ஆற்றில் தன் தோழிகளுடன் நீந்திக்கொண்டிருந்த ரைசா (Raíssa,13) என்னும் சிறுமி தண்ணீரில் மூழ்கிவிட்டாள். அதற்குப் பிறகு அவள் கிடைக்கவேயில்ல.

இந்நிலையில், லெனில்டோ (Lenildo Frazão) என்னும் ஊடகவியலாளர் அந்த சிறுமி மாயமான விடயம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றார்.

Mearim ஆற்றுக்குள் இறங்கி, மார்பளவு ஆழத்தில் நின்றபடி அவர் அந்தச் சிறுமி குறித்த விடயங்களை கூறிக்கொண்டிருக்க, கமெராமேன் அதை படம் பிடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென லெனில்டோ மீது கை போன்ற ஏதோ மென்மையாக உரச, பயந்து அங்கிருந்து சற்று தள்ளிவந்துவிட்ட அவர், ஒருவேளை அது ரைசாவின் உடலாக இருக்குமோ என சந்தேகம் எழுப்பியுள்ளார்.

அதைத் தொடர்ந்து ஆழ்கடல் நீச்சல் வீரர்களுடன் அந்த இடத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், லெனில்டோ நின்ற அதே இடத்தில் தேட, அங்கு ரைசாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

ரைசாவின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், அது தற்செயலாக தண்ணீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் 30ஆம் திகதி, ரைசாவுக்கு அமைதியான முறையில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.