;
Athirady Tamil News

கல்லறைகளிலிருந்து மாயமாகும் உடல்கள்: பொலிஸ் விசாரணை துவக்கம்

0

இந்தியாவின் ஒடிஷா மாநிலத்திலுள்ள கிராமம் ஒன்றிலுள்ள கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ள உடல்கள் காணாமல்போவதாக பொலிசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

கல்லறைகளிலிருந்து மாயமாகும் உடல்கள்
ஒடிஷா மாநிலத்திலுள்ள Maninathpur என்னும் கிராம மக்கள், கடந்த சில மாதங்களில் மரணமடைந்த நான்கு பேரின் உடல்கள், கல்லறைகளிலிருந்து காணாமல்போய்விட்டதாக பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், இது 2017ஆம் ஆண்டிலிருந்தே நடந்துவருகிறதாம்.

இதுவரை அவ்வகையில் 15 உடல்கள் கல்லறைகளிலிருந்து காணாமல்போய்விட்டதாக கிராம மக்கள் கூறியுள்ளார்கள்.

பரபரப்பை உருவாக்கியுள்ள இந்த விடயம் தொடர்பில் பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.