;
Athirady Tamil News

ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்ல ஈரான் திட்டம்: பதறவைக்கும் ஒரு தகவல்

0

ஈரான், ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்களை கொல்ல திட்டம்
ஆளும் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களுக்கு அச்சமூடுவதற்காக, எதிர்ப்பாளர்களை பொது இடங்களில் தூக்கிலிட ஈரானின் உச்ச தலைவரான அலி காமேனி (Ali Khamenei) உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1988ஆம் ஆண்டு, ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயத்தொல்லா கோமேனி, பல்லாயிரக்கணக்கான அரசியல் கைதிகளைக் கொல்ல உத்தரவிட்டார்.

நாடு முழுவதும் ஐந்து மாதங்களில் சுமார் 30,000 பேர் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா பொதுச்சபை கூறுகிறது.

இந்நிலையில், மீண்டும் அதேபோன்றதொரு படுகொலையை அரங்கேற்ற ஈரான் அரசு திட்டமிட்டுவருவதாக, 25 ஆண்டுகளாக ஈரானால் சிறையிலடைக்கப்பட்டுள்ள Saeed Masouri என்பவர் எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து அவரை வலுக்கட்டாயமாக அவரது சிறை அறையிலிருந்து இழுத்துச் சென்ற சிறை அதிகாரிகள், அவரை தனிமைச் சிறையில் அடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அரசை எதிர்த்துவந்த Mehdi Hassani (48) மற்றும் Behrouz Ehsani (70) எனும் இருவருக்கு நேற்று திடீரென மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Hassaniயின் மகள் தன் தந்தையின் விடுதலைக்காக தொடர்ந்து போராடிவந்த நிலையில், நேற்று தன்னைக் காண வருமாறு தன் மற்றொரு மகளைக் கேட்டுக்கொண்டுள்ளார் Hassani.

ஆனால், அவரது குடும்பத்தினருக்கு எந்த தகவலும் கொடுக்காமல், திடீரென Hassaniக்கு சிறை அதிகாரிகள் மரண தண்டனை நிறைவேற்ற, தாமதமாக தகவலறிந்த அவரது மகள் கண்ணீர் விடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.