எரிவாயு விநியோகம் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு
இலங்கையில் எரிவாயு விநியோகம் தொடர்ந்து உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (20.03.2026) விசேட உரையில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியே உள்ள ஒரு நிறுவனத்திற்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதன் காரணமாக நிலைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
எரிவாயு
அத்துடன் 38,000 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே வந்து சேர்ந்துள்ளது.
மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு இறக்கப்பட்டு வருவதுடன், எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் 33,000 மெட்ரிக் தொன் பெறப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.