;
Athirady Tamil News

‘இலங்கையின் பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் தமிழர்’ நூல் அறிமுக நிகழ்வு – தளம் அமைப்பு, திருகோணமலை

0

எழுநா மற்றும் திருகோணமலை தளம் அமைப்பின் ஏற்பாட்டில் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்களின் ‘இலங்கையின் பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் தமிழர்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 26.07.2025 அன்று, சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் தளம் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வின் தலைமை உரையினை தளம் அமைப்பின் இயக்குநர் வைத்தியர் ஹயக்கிரிவன் அவர்கள் வழங்க, நூல் அறிமுக உரையினை தென்கயிலை ஆதீனம் சுவாமி அகத்திய அடிகளார் நிகழ்த்தியிருந்தார். மேலும், குறித்த நூலுக்கான மதிப்பீட்டுரையினை வைத்தியர் அ. ஸதீஸ்குமார் ஆற்றியிருந்தார். தொடர்ந்து, ஏற்புரையினை நூலாசிரியர் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வழங்கியிருந்தார்.

தமிழர் தொன்மையின் மீது புதிய பார்வையினை வழங்கும் இவ்வாறான நூல்கள் காலத்தின் கட்டாயமாக இருப்பதனால், மேலும் இவைபோன்று தொடர்ந்தும் வெளியிடப்பட வேண்டும் என நிகழ்வில் கருத்துரைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் அறிவார்ந்த நபர்கள், கல்வி ஆர்வலர்கள், துறைசார் ஆர்வலர்கள், நண்பர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.