பேருந்தில் வலிப்பு வந்து துடித்த இளம்பெண் மரணம்: மருத்துவர்கள் கண்ட வித்தியாசமான காட்சி
பிரேசில் நாட்டில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவருக்கு வலிப்பு ஏற்படவே, மருத்துவ உதவிக்குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்.
மருத்துவர்கள் கண்ட வித்தியாசமான காட்சி
இந்நிலையில், அவரை சோதித்த மருத்துவர்கள் வித்தியாசமான ஒரு காட்சியைக் காண நேர்ந்தது.
ஆம், அந்த இளம்பெண், தன் உடலைச் சுற்றி 26 ஐபோன்களை டேப்பால் ஒட்டிவைத்திருந்தார்.
அவர் ஐபோன்களை கடத்தினாரா, எதனால் அவருக்கு திடீரென வலிப்பும் மாரடைப்பும் வந்தது என்பது போன்ற எந்த விவரங்களும் தெரியவரவில்லை.
இந்த வித்தியாசமான வழக்கு தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.