;
Athirady Tamil News

4 பிள்ளைகளின் தந்தைக்கு எமனான காட்டு யானை ; தமிழர் பகுதியில் சம்பவம்

0

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் யானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த யானை வீட்டின் முன்பகுதியில் வைத்து குடும்பஸ்தர் ஒருவரை தாக்கியுள்ளது.

இதன்போது யானையின் தாக்குதல் காரணமாக படுகாயமடைந்தவரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.