;
Athirady Tamil News

120 வெளிநாட்டினருக்கு சாரதி அனுமதிப் பத்திரம்!

0

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) புதிதாக நிறுவப்பட்ட சேவை கருமபீடம் இதுவரை 120 வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கவும் வெளிநாட்டினருக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

24 மணி நேரமும் செயல்படும் சேவை
24 மணி நேரமும் செயல்படும் சேவை கவுண்டர், தகுதியுள்ள வெளிநாட்டினரின் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் ஏற்கனவே உள்ள சாரதி அனுமதிப் பத்திங்களின் அடிப்படையில் தற்காலிக சாரதி அனுமதிப் பதிரங்களை வழங்க உதவுகிறது.

தற்காலிக அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் இரண்டு முதல் ஐந்து மாதங்கள் வரை இருக்கும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை , கனரக வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான உரிமங்கள் இந்த சேவையின் மூலம் வழங்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.