;
Athirady Tamil News

இலங்கையில் குடும்பஸ்தருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம் ; அதிர்ச்சி கொடுத்த பின்னணி

0

கொலைக் குற்றத்துக்காக மாத்தளை மேல் நீதிமன்றத்தினால் நேற்று முன்தினம் (1) ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு, மாத்தளை, அலகமுவ பகுதியில் உள்ள வீடொன்றில் நடந்த கொலைக்காக இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை
மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர், அலகமுவ, தலகொட சந்தி, நாவுலவைச் சேர்ந்த புஞ்சி பண்டா என்ற 59 வயதுடைய ஒருவராவார்.

சந்தேக நபர், 2012 செப்டம்பர் 17 ஆம் திகதி, மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

காணி தொடர்பான தகராறு இந்த மரணத்துக்கு வழிவகுத்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் நேரில் கண்ட சாட்சிகளாக உயிரிழந்த நபரின், மனைவி மற்றும் மகன் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.