அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் ; வாகனம் வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்
டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை மே 1 முதல் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த முயற்சி, தேசிய டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு படி முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
பொது மக்கள் பாதுகாப்பு
அத்துடன் பொது மக்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பிளாஸ்டிக் அட்டைகளுக்குப் பதிலாக இது அறிமுகப்படுத்தப்படுவது சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் துணைபுரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை, இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கை காப்பீட்டு சங்கம் மற்றும் இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்படும் என்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.