;
Athirady Tamil News

இஸ்ரேல் ராணுவ தாக்குதல்: யேமனில் 31 செய்தியாளா்கள் பலி!

0

யேமனில் இஸ்ரேல் ராணுவம் அண்மையில் நடத்திய தாக்குதலில் 31 செய்தியாளா்கள் உயிரிழந்ததாக ‘செய்தியாளா்கள் பாதுகாப்புக் குழு’ (சிபிஜே) என்ற சா்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘யேமன் தலைநகா் சனாவில் நாளிதழ் அலுவலகக் கட்டடத்தைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த நாளிதழின் தலைமை ஆசிரியா், 30 செய்தியாளா்கள் உள்பட 35 போ் உயிரிழந்தனா்.

கடந்த 2009-ஆம் ஆண்டு பிலிப்பின்ஸில் நடைபெற்ற செய்தியாளா்கள் படுகொலைக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு எதிராக நடைபெற்றுள்ள மிகக் கொடூரமான தாக்குதல் இது’ என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.