பெண்ணின் கழுத்தை வெட்டியவரை கண்டு பிடிக்க உதவிகோரும் பொலிஸார்
கூரிய ஆயுதத்தால் பெண் ஒருவரின் கழுத்தை வெட்டி தப்பிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
மத்துகம – தொலஹேன பகுதியில், 2025.04.18 திகதியன்று 34 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
பொலிஸாரால் விசாரணை
குற்றம் தொடர்பான உண்மைகள் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட சந்தேகநபர் அந்தப் பகுதியை விட்டு தப்பிச்சென்று தலைமறைவாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
எனவே, தப்பிச் சென்ற சந்தேக நபரைக் கைதுசெய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
சந்தேக நபர் பற்றிய விபரங்கள்
பெயர் – பிராமணகே தொன் சனத் ரவீந்திர நிலந்த முகவரி – இலக்கம் 78-01, இஹலகந்த, அகலவத்த தேசிய அடையாள அட்டை இலக்கம் – 840321401X சந்தேகநபர் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரியுமாயின் கீழே உள்ள தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார், பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். தொலைபேசி இலக்கம் பொலிஸ் தலைமையக ஆய்வாளர் – மத்துகம (071 – 8591701) தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவு – மத்துகம (071-8594381)