சட்டத்தரணி மற்றும் மனைவி கொலை; சகோதரர்கள் கைது
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொட்டாவையில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரிகளிடம் ஒப்படைத்ததாக குற்றம்
அதேவேளை தற்போது கைதாகியுள்ள நால்வர் மீதும், இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளையும் கொண்டுச் சென்று துப்பாக்கிதாரிகளிடம் ஒப்படைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இச்சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட சிற்றூந்து ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த இரட்டைக்கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாட்டின் அனைத்து சட்டத்தரணிகளும் இன்று பணிப்பகிஸ்கரிப்பினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.