;
Athirady Tamil News

அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணங்கள்: வெளியானது புதிய பட்டியல்

0

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பேருந்து கட்டணங்களை 12.19 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (23.3.2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை 12.19 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது 27 ரூபாவாகக் காணப்படும் ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 30 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பேருந்து கட்டணங்கள்
ஏனைய கட்டணப் பிரிவுகளும் விகிதாசார அடிப்படையில் அதிகரிக்கப்படவுள்ளன.

இது தொடர்பான மேலதிக விபரங்களை உள்ளடக்கிய புதிய கட்டணப் பட்டியல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

எரிபொருள் உயர்வினை கருத்தில் கொண்டு இன்று (23) முதல், முச்சக்கரவண்டி கட்டணம் 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.