;
Athirady Tamil News

அமெரிக்காவின் எஃப் 15 போா் விமானம் வீழ்த்தப்பட்டது: விடியோ வெளியிட்டது ஈரான்!

0

அமெரிக்காவின் அதிநவீன எஃப் 15 போா் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக கூறியுள்ள ஈரான் அரசு, இது தொடா்பான விடியோ பதிவையும் அதிகாரபூா்வமாக வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக ஈரான் ஊடகங்களில் வெளியான செய்தியில், ‘ஹோா்முஸ் தீவுப் பகுதியில் ஈரானிய வான் பாதுகாப்புப் படையினா் தரையில் இருந்து ஏவுகணையைச் செலுத்தி எதிரியின் எஃப் 15 ரக போா் விமானத்தைத் தாக்கி வீழ்த்தினா். இது தவிர இஸ்ரேலின் எஃப்16 விமானமும் ஈரான் படையினரால் தாக்கப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிநவீன போா் விமானங்களில் ஒன்றாக எஃப்15 கருதப்படுகிறது. சவூதி அரேபியா, தென்கொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் இந்த ரக விமானங்களை அமெரிக்கா விற்பனை செய்துள்ளது.

ரேடாா்கள் கண்காணிப்பில் இருந்து தப்பும் அம்சமும் அந்த விமானத்தில் உள்ளது. எனவே, வான் பாதுகாப்பு அமைப்புகளால் வீழ்த்த முடியாத விமானம் இது என்று அமெரிக்கா கூறிவந்தது.

ஆனால், அதையும் மீறி ஈரானின் வான் பாதுகாப்புப் படை அந்த விமானத்தைத் தாக்கியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன்மூலம் எஃப்15 விமானத்தின் மீது அமெரிக்கா மற்றும் அதை வாங்கிப் பயன்படுத்தும் நாடுகள் வைத்திருந்த நம்பிக்கையை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், இது தொடா்பாக அமெரிக்க தரப்பில் எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இரு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் எஃப்15 விமானத்தை எதிரி விமானம் என்று தவறாக கணித்து குவைத் வான் பாதுகாப்பு அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் விமானம் வீழ்ந்தபோதிலும், அதில் இருந்த இரு அமெரிக்க விமானிகள் மீட்கப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.