தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் – ஒருமையில் தர்க்கப்பட்ட முன்னாள் , இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை தொடர்பில் தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது.
தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் எதிர்க்கருத்து ஒரு ஒருமையில் விளித்தமையால் , கஜேந்திரனும் , நாடாளுமன்ற உறுப்பினரை ஒருமையில் விளித்து தர்க்கப்பட்டனர்.
இருவரும் சபை நாகரீகமின்றி வார்த்தைகளால் தர்க்கப்பட்டமையால் கூட்டத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.