;
Athirady Tamil News

சட்டவிரோத பேருந்து போக்குவரத்து ; கொழும்பில் விசேட சுற்றிவளைப்பு

0

கொழும்பிலிருந்து முறையான அனுமதியின்றி பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகள் மீது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (11) இரவு அதிரடிச் சோதனைகளை முன்னெடுத்தனர்.

கொழும்பு மக்கள் பூங்காவிலிருந்து (People’s Park) ஹட்டன், நாவலப்பிட்டி மற்றும் தியாகம ஆகிய பகுதிகளுக்குச் சட்டவிரோதமாகப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகளே இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் ஆய்வுக் குழுவினரும், பாஸ்டியன் மாவத்தை பேருந்து முனைய அதிகாரிகளும் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.

வழங்கப்பட்ட இரகசியத் தகவலின் அடிப்படையில் ஒரு பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டு விரிவாகப் பரிசோதிக்கப்பட்டது.

இதன் போது பயணிகள் போக்குவரத்திற்கான முறையான அனுமதிப் பத்திரம் (Permit) இல்லாமை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடப் பயணிகளிடம் அதிக பணம் வசூலித்தமை குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு பேருந்தின் உரிமையாளருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அங்கீகரிக்கப்பட்ட பேருந்து சேவைகளை மட்டும் பயன்படுத்துமாறும், அதிக கட்டணம் கோரும் பேருந்துகள் குறித்துப் புகாரளிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.