;
Athirady Tamil News

முகம் சிதைந்து, ஒரு காலை இழந்த மொஜ்தபா காமெனி: அமெரிக்க உளவுத்துறை தகவல்

0

ஈரானின் புதிய உச்ச தலைவராக உள்ள மொஜ்தபா காமேனி அமெரிக்காவின் தாக்குதலில் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

படுகாயமடைந்த ஈரானின் புதிய உச்ச தலைவர்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுப்படையினரின் பிப்ரவரி இறுதியில் ஈரான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலில் அவரது மகனும், ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மொஜ்தபா காமெனி படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

அத்துடன் இந்த தாக்குதலில் 56 வயது மொஜ்தபா காமெனிக்கு முகம் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்க உளவுத் துறை தகவல்
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி முகம் சிதைந்து இருக்கலாம் என்றும், அவரது கால்கள் பலத்த காயமடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா உளவுத்துறையில் தகவலில், மொஜ்தபா காமெனி ஒரு காலை இழந்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், மொஜ்தபா காமெனி மன தெளிவுடனும், விழிப்புணர்வோடும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆடியோ கான்பிரன்சிங் மூலம் நாட்டின் இராணுவ முடிவுகளை எடுத்து வருவதாகவும், இஸ்லாமாபாத்தில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.