;
Athirady Tamil News

முதல் தேர்தலிலேயே 34.9 சதவீதம்: கடந்த 25 ஆண்டுகளில் எந்த கட்சியும் செய்யாத சாதனை படைத்த விஜய்

0

இந்திய அரசியலில் ஒரு புதிய கட்சி தொடங்கப்பட்டு, சில காலத்திலேயே மக்களின் பேராதரவைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பது என்பது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை தொடர்ந்து விஜய் இப்போது அந்த சாதனையை படைத்து இருக்கிறார்.

தி.மு.க.விலிருந்து விலகி 1972-ல் அ.தி.மு.க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர், 1977-ம் ஆண்டு தனது பொதுத்தேர்தலை சந்தித்தார். அதில் அ.தி.மு.க. 155 தொகுதிகளில் போட்டியிட்டு, 130 வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மொத்தம் 30.36 சதவீத வாக்குகளைப் பெற்றது.ஆந்திர அரசியலில் 1983-ல் நடைபெற்ற மாற்றம் இந்தியாவையே உலுக்கியது. கட்சி தொடங்கிய 9 மாதங்களிலேயே என்.டி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். அவரது தெலுங்கு தேச கட்சி 289 தொகுதிகளில் போட்டி, 201 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மொத்தம் 46.30 சதவீதம் வாக்குகளைக் குவித்து காங்கிரஸ் கோட்டையைத் தகர்த்தது.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக 2012-ல் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி , 2013 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலாகக் களம் கண்டது. 70 தொகுதிகளில் போட்டியிட்டு 28ல் வென்றது. மொத்தம் 29.49 சதவீத வாக்குகளை பெற்றது. அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத போதிலும், காங்கிரசின் வெளிப்படையான ஆதரவுடன் முதல் தேர்தலிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.அந்த பட்டியலில் 4-வது விஜய் இடம் பிடித்துள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு கட்சி தொடங்கி விஜய், 2 ஆண்டுகளில் தனது முதல் சட்டசபை தேர்தலிலேயே 233 தொகுதிகளில் தனித்து களம் கண்டு 110 தொகுதிகளில் வெற்றி பெறுகிறார். அவருக்கு தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும், அவருக்கு சில கட்சிகள் ஆதரவு தர இருப்பதால் விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்கிறார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அளவில் விஜய் இன்னொரு சாதனையும் படைத்து இருக்கிறார். கடந்த 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு கட்சி தொடங்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே அதிக வெற்றி பெற்று விஜய் சாதனை படைத்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:

தவெக; (2026): 34.9 சதவீதம் ( முன்னிலை தொகுதிகள்: 109)

ஆம் ஆத்மி (2013); 28 தொகுதிகள் வெற்றி: 29.5 சதவீதம்

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்: 70/266: 27.9 சதவீதம்

எல்.ஜேபி (2005) : 12.6 சதவீதம்

டிஆர்.எஸ் (2004): 25 தொகுதிகளில் வெற்றி : 6.7 சதவீதம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.