;
Athirady Tamil News

நாட்டில் மீண்டும் தலைதூக்கும் நோய் ; இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

0

நாட்டில் கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 68 யானைக்கால் நோய் (Filariasis) பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இப்பரிசோதனைகளின் போது கண்டறியப்பட்ட நோயாளர்களில் சரிபாதியானோர் இந்தியாவில் இருந்து வருகை தந்து இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டுப் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யானைக்கால் நோய்
யானைக்கால் நோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் பிரசங்க சேரசிங்க இது குறித்து தெரிவிக்கையில், 68 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 34 பேர் இலங்கையர்கள் எனவும், ஏனைய 34 பேர் இலங்கையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தியப் பிரஜைகள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்நோய் தொற்று பிரதானமாக கொழும்பு,கம்பஹா,களுத்துறை,காலி,மாத்தறை,ஹம்பாந்தோட்டை,குருநாகல் ஆகிய ஏழு மாவட்டங்களில் தொடர்ச்சியாக பதிவாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இருந்து யானைக்கால் நோயை 2030ஆம் ஆண்டுக்குள் முழுமையாக ஒழிப்பதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.

உள்ளூர் ரீதியாகப் பரவும் தொற்றுகளை பூச்சியமாகக் குறைப்பதற்கும், நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் பொதுச் சுகாதாரக் கண்காணிப்புத் திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது இந்நோய் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், முறையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஊடாக இதனை முறியடிக்க முடியும் எனவும் சுகாதாரத் துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.