மஹிந்த சமரசிங்க இராஜினாமா
அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கான தற்போதைய இலங்கைத் தூதுவரும், முன்னாள் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க, தனது பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அவரது பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடையவிருந்தது.
இந்நிலையில் அவரது அரசியல் அனுபவத்தை மேலும் பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசியலில் நீண்ட காலம் பயணித்த அவர், 2021-ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி வெளிநாட்டுச் சேவையில் இணைந்துகொண்டார்.
நாட்டின் கடந்தகால பொருளாதார நெருக்கடி சூழலில் இருந்து இன்று வரையான அவரது பணிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன