;
Athirady Tamil News

ஹமாஸ் புதிய ஆயுதப் படைத் தலைவர் கொல்லப்பட்டார்; இஸ்ரேல்

0

ஹமாஸ் அமைப்பின் புதிய ஆயுதப் படைத் தலைவரைக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் புதிய ஆயுதப்படை தலைவரான முகமது ஓடே, காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் இதுபற்றிப் தெரிவிக்கையில், “காஸாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் ஆயுதப்படையின் தலைவர் நேற்று முன்தினம் கொல்லப்பட்டார்.

நரகத்தில் உள்ள கூட்டாளிகளைச் சந்திப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்
நரகத்தில் உள்ள தனது கூட்டாளிகளைச் சந்திப்பதற்காக அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பிரதமர் மற்றும் என்னுடைய சார்பாக இந்த அற்புதமான செயல்பாட்டிற்காக இஸ்ரேல் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.

அக்டோபர் 7 தாக்குதலுக்குக் காரணமான அனைவரையும் அழிப்போம் என உறுதியெடுத்தோம். அதனை நாங்கள் செய்து முடிப்போம். அவர்கள் அனைவருக்கும் மரணம் உறுதி” என்று தெரிவித்தார்.

ஹமாஸ் மீது நேற்று தாக்குதல் நடத்தவிருப்பதை அறிவித்த பின்னர் கட்ஸ் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட கூட்டறிக்கையில், “அக்டோபர் 7 தாக்குதலின்போது ஓடே ஹமாஸ் உளவுத்துறையின் தலைவராகப் பணியாற்றினார்.

இஸ்ரேலில் பொதுமக்கள், இராணுவ வீரர்கள் என பலர் உயிரிழந்ததற்கு அவரே காரணமாக இருந்தார்” எனத் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.