;
Athirady Tamil News

அமெரிக்கா-சீனா மோதினால்…லண்டன் நிறுவனம் பகீர் அறிக்கை

0

தைவான் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே போர் மூண்டால், அது உலகையே அழிக்கும் அணுஆயுதப் போராக மாற வாய்ப்புள்ளதாக லண்டன் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.சிங்கப்பூரில் நேற்று நடைபெற உள்ள சர்வதேச பாதுகாப்பு மாநாட்டுக்கு முன்னதாக இந்த அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.

ஆயுத மோதல்
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் புதிய அணுஆயுதப் போட்டி தீவிரமடைந்து வருவதாகவும், நாடுகள் தங்களது அணு ஆயுத பலத்தை ரகசியமாக அதிகரித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.இரு நாடுகளும் பரஸ்பரம் தங்களின் கட்டுப்பாட்டு மையங்களை தாக்க முற்படும்போது, போரை கட்டுப்படுத்த எந்த ஒரு பாதுகாப்பு விதியும் இல்லாததால் அணு ஆயுத மோதல் தவிர்க்க முடியாததாகிவிடும் என பாதுகாப்பு நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்கா மற்றும் ரஷியாவிடம் முறையே 3 ஆயிரத்து 700 மற்றும் 4 ஆயிரத்து 400 அணுஆயுதங்கள் உள்ள நிலையில், சீனா தனது அணுஆ யுதங்களை அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.